கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 70 வது அகவையான 2105/11/22 ஐ முன்னிட்ட நிகழ்வு நேற்று 2015/11/23 ம் திகதி திங்கள் கிழமை பாடசாலையில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வினை பாடசாலையின் அதிபர் திருமதி ரோஸ் புகாரி அவர்கள் கேக் வெட்டி ஆரம்பித்து வைத்தார். 

இதனைத் தொடர்ந்து HSPA (Higher Studies Pupils Association) வின் தலைவர் சிபாஸ் நஸாரினால் பாடசாலை நூலகத்திற்கு பெறுமதி மிக்க கணனி அறிவினை மேம்படுத்தும் புத்தகங்கள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

ஊடகப்பிரிவு
HSPA
(Higher Studies Pupils Association)