அல் அக்ஸா தொடக்கம் அல் மனார் வரையிலான சேதமுற்றிருந்த வீதியினை புணர்நிர்மானிக்கக் கோரி பொது மக்களின் கையொப்பங்கள், இப் பகுதி பள்ளிவாசல் நிர்வாக சபைகளின் கடிதங்கள் அடங்கிய மகஜர் 2015/10/14 ம் திகதி புதன் கிழமை பி.ப 12:58 மணிக்கு கல்பிட்டி பிரதேச சபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அதே நேரம் செயலாளர் ஆகிய குமார அவர்கள் வெகு விரைவில் இவ் வீதியினை புணரமைத்துத் தருவதாகக் கூறிய வாக்குறுதிக்கினங்க 2015/11/17ம் திகதி செவ்வாய் கிழமை அதாவது நேற்று குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வீதிப் புணரமைப்பின் முதற்கட்டப் பணியினை ஆரம்பித்து வைத்தமைக்காக இதய பூர்வமான நன்றியைத் தெரிவிப்பதோடு இப்பணியானது Hspa Kalpitiya இன் வேண்டுகோளினை முன்னிருத்தித்தான் இடம் பெறுவதாகவும் சிலர் இதனை அரசியலாக்க முட்படுவதாகவும் கூறிச் சென்ற கருத்தினையும் வரவேற்று நிற்கின்றேம்.......

((#. இவ்வீதியின் முழுமையான புணரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை HSPA அவதானித்துக் கொண்டே இருக்கும்.))